ஆகஸ்டு 15



ஆகஸ்டு 15


இதுவரை சீருடையில் பார்த்துவிட்டு

கலர் உடை அணிந்து வரும் நண்பனிடம்

"இந்த உடை எங்கு வாங்கினாய்???"

என விசாரிக்க மனமில்லை

எந்த உடையில் அவள் வருவாள் என்று நினைத்துக்கொண்டிருந்ததால்.



தமிழ்த்தாய் வாழ்த்து 

எனக்கு மட்டும் இரைச்சலாய்.

அவளுக்கு என்ன வாங்கிச் செல்லலாம்....?

மஞ்சள் ரோஜா பிடிக்கும் என்றாளே.



கொடிவணக்க பாடல்

எனக்கு மட்டும் கொடுமையாய்.

கூட்டம் அதிகமாய் இருக்குமே.
டிக்கெட் கிடைக்குமா...?

'காதல்' படம் பார்க்க வேண்டும் என்றாளே



எனக்காக அவள் அங்கு காத்திருக்க

காந்தியையும் காமராசரையும் பற்றி

எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.


அப்பாடி

ஒரு வழியாய்
எல்லாம் முடிந்தது


நான் 10 மணிக்கு வந்துவிடுவேன் என

7 மணிக்கே வந்திருப்பாளே


அவசர அவசரமாய்

வண்டி எடுத்து கிளம்பினேன்

அவளை காணும் அவசரம் என் வண்டிக்கும் போல.

120 கீ.மீ வேகத்துடன் பறக்கிறது.


குறுக்கே ஒரு சிறுவன் 


நல்ல வேளை கவனித்துவிட்டேன்

வண்டியை நிறுத்தி விட்டு

அவனை பளார் என்று அறைய கை ஓங்கினேன்


அவன் சிறுவன் மட்டுமல்ல.

குருடனும் கூட


"என்னடா இவ்வளவு அவசரம்...?"

கேட்டது நான்.

கொடியேற்ற நேரமாகிவிட்டதண்ணா

அவனின் பதில் அல்ல.

எனக்கு கொடுத்த சாட்டையடி.


கண்ணிருந்தும் குருடனாய் நான்.

கண்களில்லாமல் போதி மரமாய் அவன்.


வருடம் முழுதும் அவள் நினைவுகள்.

ஆகஸ்டு 15 அன்றாவது அன்னை நாட்டின் நினைவுகள்.


மீண்டும் வண்டியெடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

அவளைக் காண அல்ல.


அவனுடன் முதல்முறை

சுதந்திரத்தைக் கொண்டாட.


மனதில் சின்ன ஒரு ஆசை

அவளும் சுதந்திரத்தை சுதந்திரமாக கொண்டாட வேண்டுமென்று.

Comments

Divya said…
தேசியப்பற்றை உணர்த்தும் கவி வரிகள் மிகவும் அருமை,

\\மனதில் சின்ன ஒரு ஆசை...!
அவளும் சுதந்திரத்தை சுதந்திரமாக கொண்டாட வேண்டுமென்று....!\\

பெண்களின் சுதந்திரத்தையும் , இதனுடன் கோர்த்திருப்பது, உங்கள் கவிதைக்கு மேலும் அழகு சேர்த்தது!
Unknown said…
Good message. Very nice
Ragavan said…
(கவி)மதி,
காதலிக்க ஆரம்பித்தால் விட்டால்
காதலுடன்
தேசியமும், சுதந்திரமும்
கூடவே(அவளும்)!
சேர்ந்து வரும்.

நல்ல கவித்திறன்(உக்காந்து யோசீப்பார்களோ)

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு