Posts

கவிதை

  மலை வனங்களுக்குள் மறைந்திருக்கும் ஒளியைக் கண்டடைய பணித்திருக்கிறது காலம். ஒளி நிறைந்திருக்கிறது இருந்தும் நீங்கியிருக்கிறது . முகடு நோக்கி மெதுவாய் நகரும் பனிமேகத்தின் அகங்காரப் பிதற்றல் உனக்கு. எதற்கும் அசையாத மலையின் வெற்றுத்திமிர் எனக்கு. சதை தின்னும் நம் விலங்குகளுக்கு தெரிவதில்லை இவையெதுவும்.  

கவிதை

  நெரிசலற்ற பாதையில் சீரான ஒரே வரிசையில் ஊர்கிறது பயணம் காதல் முன்வண்டியில் செல்கிறது. காமம் பின்வண்டியில் துரத்துகிறது. காமத்திற்கும் காதலுக்கும் இடையில் பயணிப்பது அவ்வளவு சுகமில்லை. ஆனால் சுவாரசியமானது. சாலையின் இருமருங்கிலும் அவ்வளவு வேகமாக ஓடுகின்றன திணைகள் யுகங்கள் உணர்வுகள் . யார் நட்டது தெரியவில்லை உணர்வுகள் மட்டும் பின்னோக்கிச் செல்கின்றன.  

கவிதை

  முப்பதுக்குள் நுழைபவளின் தெளிந்து கொண்டிருக்கும் இடையைப் போலப் புலர்ந்து கொண்டிருக்கிறது வானம். மெல்லமாகவும் கொஞ்சமாகவும் தெரிகிறது பரிதி. தீர்ந்து தீர்ந்து நிறைந்தும், நிறைந்து நிறைந்து தீர்ந்தும் சற்றுமுன் வரை நாம் விளையாடிய விளையாட்டில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது. அச்சமூட்டாத வனம் நமக்கு அரணாக இருக்கையில் ஆடைகளுக்கு நம் பாதி உடல் போதுமானது. முன்னிரவில் நமக்களித்த சிறகுகளை எடுத்துகொண்டு இரை தேட கிளம்பிற்று இரு பறவைகள். அதற்காக அவை திரும்பி வரும் மாலைக்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை. இயல்பற்றதாய் நீ உள்ளிழுத்துப் பின் உலகிற்கு ஈந்து கொண்டிருக்கும் மூச்சுக் காற்று நீ தூங்கவில்லை என்றது. ஒருக்களித்து உரசிக் கொள்ளும் உன் கெண்டைச் சதைக்கும் பின்னந் தொடைக்கும் இடையில் சிக்கி லயித்திருந்தது ஒரு சின்னஞ் சிறு செடி. கருணையில் நான் அச்செடி தளர்த்த மீண்டும் துளிர்த்த காமமெனக் கருதி லேசாகச் சிணுங்கினாய். அசைந்து பூத்த அந்தச் சிணுங்கலுக்கு முன்னம் ருசித்த ஈச்சம்பழ வாசம். இமைகள் திறக்காது இதழ் விளிம்புகளில் இடுக்கி வைத்த சிரிப்பைக் கன்னக்குழி காட்டிக்கொடுத்தது. எப்பொழுதும் க...

அம்மா

Image
  அரசு பள்ளி அல்லது தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு குருதி உறவு அன்றி அம்மா என்று அழைப்பதற்கு தமிழ் ஆசிரியர்கள் இருப்பார்கள். எங்களுக்கு தமிழ் அம்மாக்களைத் தாண்டி இன்னொரு அம்மாவும் இருந்தார். எங்கள் தலைமை ஆசிரியை ருக்மணி அம்மா. பொதுவாக தலைமையாசிரியருக்கு மாணவர்கள் பயப்படுவார்கள். ஆசிரியர்கள் பயப்படுவார்கள். பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளிக்கு வரும் 500 மீட்டர் பாதையில் உள்ள கடைக்காரர்கள் கூட எங்கள் அம்மாவிற்கு கொஞ்சம் பயப்படுவார்கள். பயமும் இருக்கும் மரியாதையும் இருக்கும். கண்டிப்பான முகம் , அளவான சிரிப்பு , தீர்க்கமான முடிவை நோக்கிய தெளிவான பேச்சு , தேவைப்படும் நேரத்தில் சின்ன பாராட்டு , உடலெங்கும் உள்ள கம்பீரம் என அம்மாவை விளக்குவதற்கு ஏராளம் உள்ளன. எல்லாம் தாண்டி அம்மாவின் செயல் ஊக்கமும் அதீத அக்கறையும் வியக்க வைப்பன. பேரூராட்சியாக இருந்த நரசிம்மநாயக்கன்பாளையத்தில் 90 களில் எங்கள் அம்மாவை தெரியாதவர் யாரும் இருக்க இயலாது . அம்மாவும் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு எல்லோரிடமும் உரிமை கொண்டவர். பெற்றோர் ஆசிரியர் கழகம் அறிவொளி இயக்கம் ஆகியவற்றை துடிப்போடு வைத்துக் ...

தன்மீட்சி

Image
  ஊரில் பெரியப்பா ஒருவர் இருக்கிறார். சிவாச்சாரியார். பெரியப்பா என்று உள்ளன்போடு நினைக்கும் அளவிற்கு எந்த வேறுபாடும் இல்லாமல் உண்மையான உறவாகவே மூன்று தலைமுறைகளாகப் பிணைந்திருக்கும் குடும்பம். நாங்கள் மட்டுமில்லை ஊரில் உள்ள எல்லா குடும்பங்களுடன் உறவாக வாழும் குடும்பம். பெரியப்பா சிறுவயதில் இருந்து மிகவும் சிரமப்பட்டவர். தாத்தா கோவில் பூஜை தான் குடும்பத்தின் ஒரே வருமானம். ஐந்து சகோதரிகளுடனும் ஒரு தம்பி உடனும் வாழ்ந்த பெரியப்பா குடும்பத்திற்காக கடல் தாண்டுகிறார். கடல் தாண்டுதலின் எல்லை எதுவென்றால் திருமணம் ஆகி பெரியம்மாவை விட்டு வந்து சில ஆண்டுகளுக்குப் பின்பு ஊர் திரும்பியவுடன் தன்னுடைய மகளே தன்னை மாமா என்று அழைக்கும் அளவுக்கு உள்ளத்தாலும் வருந்தியவர். அதற்கு பலனாகப் பொருளாதரம் உயர்ந்தது. பொருளாதாரம் உயர்ந்தாலும் எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்கும் அவருடைய குணத்தால் புகழும் நிறைந்தது.மகனைப் போல ஒரு தம்பியையும் தம்பியைப் போல ஒரு மகனையும் வளர்த்தார். அவருக்கு ஈடாகவும் சொல்லப்போனால் அதற்கும் மேலாகவும் அவருடைய தம்பியும் மகனும் செய்த பல நற்காரியங்கள் அவருடைய ஆன்ம திருப்திக்குப் பலம் சேர்த்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்! ... ஆண்டாள் அகத்திலும் புறத்திலும் கிராமங்கள் ஒளிர்க.இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

poemsontheMRT

Image
Poems on the MRT is an initiative by the National Arts Council, in partnership with SMRT Trains and Stellar Ace. Produced by Sing Lit Station, a local literary non-profit organisation, this collaboration displays excerpts of Singapore poetry throughout SMRT’s train network, bringing Sing Lit to the daily commute. From 6 November 2025 to 4 November 2026, The poems are displayed in English, Chinese, Malay, and Tamil in trains on the East-West, North-South, and Circle Lines. Poems will also be displayed on posters in train stations (till 6 May 2026) and bulletins at bus stops (till 4 February 2026). Thank you National Arts Council Singapore , Sing Lit Station and poems on MRT team for displaying one of my poems. Wishes for other poets as well. சிங்கப்பூர் மெட்ரோ ரயில்கள் , ரயில் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் எனது கவிதையைத் தேர்ந்தெடுத்து காட்சிப்படுத்தியமைக்கு சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் , Sing Lit Station மற்றும் poems on MRT குழுவினருக்கு மனம் நிறைந்த நன்றி. உடன் இருக்கும் ...