என் தலைவியை பற்றி எழுதுகையில் தலைப்பெதற்கு.
அகரமுதல எழுத்தெல்லாம் கற்க ஆசை வந்ததே
அவள் பெயரை கேட்டதிலிருந்து
தமிழுக்கு அமுதென்று பெயராம்...
யார் சொன்னது
அவளிருக்கையில்.
அவள் பெயரை கேட்டதிலிருந்து
தமிழுக்கு அமுதென்று பெயராம்...
யார் சொன்னது
அவளிருக்கையில்.
அய்யோ.
ஏன் என்னுடல் இப்படி அனலாய் கொதிக்கிறது
காய்ச்சல் அடிக்குமோ
அவளுக்கு .
இருட்டிலும் அழகாகத் தான் கோலம் போடுகின்றேன்.
அவள் கூந்தலில் என் விரல்கள்
காகிதப்பூவிற்கு இவ்வளவு மணமா.
ஓ...அருகில் அவள்.
என் சுகங்கள் அத்துனையும் பகிர்ந்துகொள்ள தயார்..
அவள் பெயரை உச்சரிக்கும் அந்த சுகத்தை தவிர.
அவளைப்பற்றி எழுதும்போது என் பேனாவிற்கு கூட
காதல் வரும் போல
காகிதப்பெண்ணுக்கு எவ்வளவு இதமாக விடாமல்
முத்தம் கொடுத்துக்கொண்டே செல்கிறது.
என் சுகங்கள் அத்துனையும் பகிர்ந்துகொள்ள தயார்..
அவள் பெயரை உச்சரிக்கும் அந்த சுகத்தை தவிர.
அவளைப்பற்றி எழுதும்போது என் பேனாவிற்கு கூட
காதல் வரும் போல
காகிதப்பெண்ணுக்கு எவ்வளவு இதமாக விடாமல்
முத்தம் கொடுத்துக்கொண்டே செல்கிறது.
Comments
\\அவளைப்பற்றி எழுதும்போது என் பேனாவிற்கு கூட
காதல் வரும் போல......
காகிதப்பெண்ணுக்கு எவ்வளவு இதமாக விடாமல்
முத்தம் கொடுத்துக்கொண்டே செல்கிறது....!\\
Wonderful lines!