முட்களின் வாசத்தில்.

புனேக்கு செல்ல கிளம்பிவிட்டேன்.
எல்லோரிடமும் சொல்லிவிட்டேன்.
இன்னும் இல்லை
அவளிடம் மட்டும்.

கால்கள் மட்டும் BUS STAND-க்கு பயணிக்க.
கண்கள் ஏனோ என் CELL PHONE-ஐ நோக்கி தவம் செய்தன.
தேவதை உன் அழைப்பிற்க்காக.

சென்ற வாரம்.
நீ வேலை தேட நான் வழியனுப்பினேன்
இன்று
நான் வேலை செல்ல உன் குரல்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

பசித்தவனுக்கு படையலாய்.
கர்ப்பிணிக்கு மாந்தோப்பாய்..
வந்தது உன் CALL

உன் உதடு காயப்படும் என தெரிந்தும்...
என் cell phone key -ஐ அழுத்தியது என் கட்டை விரல்....

அவசரத்தில்.
"எப்படி இருக்கீங்க...?
ம்..நல்லா இருக்கேன்...
நல்லபடியா போயீட்டு வாங்க

ம்...சரி.."


அதிகம் நான் பேசினால்..எங்கே
உன் குரல் கேட்கமுடியாதென..
அமைதியாய் நானிருந்த நேரத்தில்...
" Bye " என்று சொல்லி வழக்கம்போல
அணைத்தாய்...
உன் phone-ஐ.. மட்டும்..


வள்ளுவன் குறள் கூட..
ஏழு வார்த்தை கொண்டது.
என் காமத்துப்பாலே.
உன் குரலில் மட்டும் ஏனடி வார்த்தைகள்
குறைந்துகொண்டேயிருக்கிறது.

புரியாமல் செய்கிறாயோ...இல்லை
எனைத்தெரிந்தே கொல்கிறாயோ.


புனே.
அழகிய நகரம் தான்....ஏனோ
அழகாய் தெரியவில்லை..
அவளில்லாமல்.


பச்சை பசும்புல்வெளிகள்...பாவை உன்
பாதம் படாமல்
உறங்கிக்கொண்டிருந்தன.



தன்னைத்தாங்கும் வேரைக்காண முடியாமல்
தலையைத் தொங்கப்போட்டன.
இங்குள்ள மரங்கள்..-உன்னை காணாத
என்னைப் போல.


ரோட்டோர பூக்கடையில்..
வாடித்தான் போயின மல்லிகை பூக்கள்..
உன் கூந்தலில் மலராமல்.

குளு குளு அறை
என்ன பயன்.
உன் மூச்சுக் காற்றை விடவா
இந்த AC காற்று.

நல்ல வேலையிலிருந்தும்
தேடிக்கொண்டிருக்கிறேன்...
ஒரு வேலை.
உன்னை இங்கு வரவழைக்க.

கொச்சை முத்தங்களின் சத்தங்கள்
இங்கு எனைச் சுற்றி அரங்கேற..
உன் சுடும்விழி மட்டும் நான் காண
கரைந்துகொண்டிருக்கிறேன்..

என் கண் பார்த்ததும்..
மண் பார்க்கும் நீயில்லாமல்-இங்கு
மண்ணாகவே பார்க்கிறேன்
மனிதர்களைக்கூட..

உன் இதழ் பார்த்த பின்பே
காதலித்தேன் ரோஜவை அங்கு
பல ரோஜாக்களிருந்தும்...
செத்துக் கொண்டிருக்கிறேன்
முட்களின் வாசத்தில் இங்கு..

Comments

Suresh M.S. said…
I like the below lines the most ... superb!
தன்னைத்தாங்கும் வேரைக்காண முடியாமல்
தலையைத் தொங்கப்போட்டன...
இங்குள்ள மரங்கள்..-உன்னை காணாத
என்னைப் போல...!
சென்ற வாரம்...

நீ வேலை தேட நான் வழியனுப்பினேன்...!

இன்று

நான் வேலை செல்ல உன் குரல்

தேடிக்கொண்டிருக்கிறேன்....!
Yaara athu... seekirama soliru
Divya said…
Wonderful Kavithai,
Crawled in from Sathish's blog,
Keep writing more pls!!
Divya said…
\\அதிகம் நான் பேசினால்..எங்கே

உன் குரல் கேட்கமுடியாதென..

அமைதியாய் நானிருந்த நேரத்தில்...\\

hahaha, aangal amaithiya irupathuku ipdi oru kaaranam irukka???
Gud one,
Will comment in tamilfont later,
much impressed by ur writing,
Keep rocking!
நன்றி சுரேஸ்...!
sathish said...
சென்ற வாரம்...

நீ வேலை தேட நான் வழியனுப்பினேன்...!

இன்று

நான் வேலை செல்ல உன் குரல்

தேடிக்கொண்டிருக்கிறேன்....!
Yaara athu... seekirama soliru....
*************

சதிஷ் ....

கற்பனைக்கு பெயர் எப்படி சூட்டுவது...?
Divya said...
Wonderful Kavithai,
Crawled in from Sathish's blog,
Keep writing more pls!!
*************

Thanks divya....

R u sathish frend ??
\\அதிகம் நான் பேசினால்..எங்கே

உன் குரல் கேட்கமுடியாதென..

அமைதியாய் நானிருந்த நேரத்தில்...\\

hahaha, aangal amaithiya irupathuku ipdi oru kaaranam irukka???
***************

திவ்யா...!

ஆண்கள் அமைதியாய் இருக்க அதுவும் ஒரு காரணம்....

ஆனால்,

அது மட்டுமல்ல...!
RaaM said…
This comment has been removed by a blog administrator.
Divya said…
\\ Mathi... said...
\\அதிகம் நான் பேசினால்..எங்கே

உன் குரல் கேட்கமுடியாதென..

அமைதியாய் நானிருந்த நேரத்தில்...\\

hahaha, aangal amaithiya irupathuku ipdi oru kaaranam irukka???
***************

திவ்யா...!

ஆண்கள் அமைதியாய் இருக்க அதுவும் ஒரு காரணம்....

ஆனால்,

அது மட்டுமல்ல...!\\

ஆண்கள் அமைதியாக இருக்ka பல காரணங்கள் இருக்கும் போலிருக்குதே.....சரி சரி, காரணம் எதுவாக இருந்தாலும், 'அமைதியாக' பெண்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு மட்டும் இருக்கும் வரை பிரச்சனையில்லை!!!
[Just kidding!!!]

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு