எது அழகு.

மலராத மொட்டில்
தேன் உறிஞ்ச முட்டிமோதும்
வண்டா.
காதலே தெரியாத வயதில்
கட்டியணைத்துஎனக்கு நீ
கொடுத்த முத்தமா.
எது அழகு.
வாசுகி பெற்றெடுக்காத
வள்ளுவனின்ஒன்னே முக்கால் அடி
குழந்தை திருக்குறளா.
பரிட்ச்சைபயத்தில் திக்கித் திணறி
வேர்த்து விறுவிறுத்து என்னிடம் நீ
ஒப்பிக்கும் செய்யுளா.
எது அழகு
வானக்கண்ணாடி உடையும்போது
வரும்வெள்ளை
மின்னலா.
எனைக் கடந்து செல்லும்போது
எனக்குத் தெரியாதென்று -எனைப் பார்த்து
பின் நிலம் பார்க்கும்
உன் பார்வையா.
எது அழகு.
உன் குரல் கேட்குமென - நான்
காத்திருக்கும் வருகைப்பதிவேட்டின்
உன் பெயரா.
நீ திரும்புவாய் எனசத்தமாய்
நான் கூப்பிடும் -அருகிலிருக்கும்
என் நண்பனின் பெயரா
எது அழகு.
வகுப்பறையில் நீயும் நானும்
பாடத்தை நான்
கவனித்துக்கொண்டிருப்பேன் என
நினைத்து நீ நிரப்பிய
புள்ளிக் கோலங்கள் உள்ள
உன்நோட்டின் பக்கங்களா.
உன்னையே நினைத்து
உன் கண்களை வரைந்து
நான் நிரப்பிய
என் நோட்டின் பக்கங்களா
எது அழகு.
உன் கண் குளத்தில் நீராடும்
கருப்பு நிலவைக் காண
ஓடிவரும்
உன் கூந்தலா
அதைக் கண்டு ஆத்திரம் கொண்டு
அந்த கூந்தல் மகனை
காது மடலுக்குள் அடக்கும்
உன் அழகிய விரலா
எது அழகு.
நான் பென்சிலை தொலைத்துவிட்டு
உன்னிடம் கேட்க்கும்போது
அதை எடுக்கும் பொருட்டு
ஜியாமென்டரி பாக்சை திறக்கும் போட்டியில்
உன் பூவிரல்களைதோற்கடித்துவிட்டு
வெற்றிவாகை சூடும்
உன் அழகிய பற்களா
உன் இதழ்க்கோட்டை வாசலை
திறந்தவுடன் அழகாய் அணிவகுத்து
நிற்கும்வெள்ளாடை வேந்தர்களாம்
உன் அழகிய பற்களை காண்பதற்க்காகவே
என்னால் தூக்கியெறியப்படும்
என் பென்சிலா
எது அழகு.
அவளின் பின்வரிசையில் நான்
மெதுவாக அடிக்கும் காற்று -
அவளைக்கண்டு சற்று வேகம் கொள்ள....
என் முகத்தில் வந்து முத்தமிட்டுச்
செல்லும் அவளின் அழகிய கூந்தலா
அவள் குளித்து தலைதுவட்டி போடும்
துண்டில் அவளை பிரிந்து உயிருக்குப் போராடி
பின்என் டைரிக்குள் அடைக்கலமாகும்
அந்த ஒற்றை முடியா
எது அழகு.
Comments
உன்னிடம் கேட்க்கும்போது
அதை எடுக்கும் பொருட்டு
ஜியாமென்டரி பாக்சை திறக்கும் போட்டியில்
உன் பூவிரல்களைதோற்கடித்துவிட்டு
வெற்றிவாகை சூடும்
உன் அழகிய பற்களா...?\\
ippadi.....ippadi thaan geometry box open panuvoam, aha........ithai kooda kavithai la alaga solirukireenga, grt!!!!!!!
அந்த கூந்தல் மகனை
காது மடலுக்குள் அடக்கும்
உன் அழகிய விரலா...
எது அழகு....?\\
ovoru asaivaiyum nunukama gavanichu eluthirukira kavithai.....super!!
\\அதைக் கண்டு ஆத்திரம் கொண்டு
அந்த கூந்தல் மகனை
காது மடலுக்குள் அடக்கும்
உன் அழகிய விரலா...
எது அழகு....?\\
ovoru asaivaiyum nunukama gavanichu eluthirukira kavithai.....super!!
***********
திவ்யா...!
கவனித்து என்பதை விட ...
'கற்பனையில் (மட்டும்..!)' நினைத்து , ரசித்து
எழுதினேன் என வைத்துக்கொள்ளலாமே...!
நன்றி திவ்யா...!
உங்கள் ரசனைக்கு...!
உன்னிடம் கேட்க்கும்போது
அதை எடுக்கும் பொருட்டு
ஜியாமென்டரி பாக்சை திறக்கும் போட்டியில்
உன் பூவிரல்களைதோற்கடித்துவிட்டு
வெற்றிவாகை சூடும்
உன் அழகிய பற்களா...?\\
ippadi.....ippadi thaan geometry box open panuvoam, aha........ithai kooda kavithai la alaga solirukireenga, grt!!!!!!!
*****************
திவ்யா...
என்னை பொருத்தவரை எல்லாமே அழகுதான்...!
அதிலும் கடவுள் எழுதிய கவிதை ...
பெண்மை ...
அவர்களின் ஒவ்வொரு அசைவும் ..
கவிதையின் நளினம்தான்...!