அக்னிச்சிறகே



அணுவைத் துளைத்தெம்

மார்பை உயர்த்தியவரே

அணுஅணுவாய் ரசிக்கிறோம்

உம் ஆற்றலை



ஆலம் விழுதாய் இருந்தும்

ஆற்றங்கரை நாணலாய் இருப்பவரே...

ஆவலுடன் ரசிக்கிறோம்

உம் எளிமையை.



இழிவாய் பேசியவர்களையும்

இமயமளவு இமைவிரிய வைத்தவரே...

இராமேஸ்வர காற்றும் தாண்டவமாடும்

நானும் இம்மண்ணுக்காரனென்று



ஈட்டி எறிய வந்தவரும்

ஈமக்கிரியைக்கு தயாராவர்...

உம் சுட்டெரிக்கும்

கண்கள் கண்டு.



உப்பாற்றங்கரையில் பிறந்து

உலகை காய்ச்சியவரே...

உம் சுட்டுவிரல் நீட்டும்

ஆதவன் கூட அடிமையாவான்.



ஊமைகளாய் இருந்தவர்களையும்

உலைகளைப்பற்றி பேச வைத்தவரே...

உம்மென்று சொல்லும்

110 கோடியும் உம் பின்னால்.



எரிமலை மீதேறி

ஏவுகணை கொடி கட்டியது போதும்

எம்மக்கள் எல்லாத் தேவைகளும்

பெற்றிட வழி செய்திடுக.



'ஏழைநாடு இந்தியா!'

இறந்த காலமாய் மாறிட

'வல்லரசு பாரதம்!' நிகழ்காலமாகிவிட

ஏணிப்படிகளாய் இருந்திடுக.



ஐயத்தை உள்ளத்தில் கொண்டு

ஆர்ப்பரிக்கும் அந்நிய நாடுகள்.

வாலை நறுக்க

'அமைதியாய்' முயற்சி செய்க.



ஒன்றுமில்லா ஏழைகளின்

ஒட்டுமொத்தக் கவலைகளைத் தீர்க்காவிடினும்

அவர்களின் ஏழ்மைத்தீ அணைய

ஏதேனும் செய்திடுக.



ஓட்டுப்போட்ட கூட்டத்தின்

வாட்டத்தை போக்க..

நம்மூர்அரசியல் முதலைகளுக்கு

வலைஒன்று சீக்கிரமே பின்னிடுக.



ஔவைத்தமிழ் போல் வாழ்க

என் அன்னைத்தமிழையும் வளர்க்க

'குடியரசுத்தலைவர்' பெரிதில்லை உமக்கு!

என் உள்ளத்தில் என்றுமே

நீர்குடியாட்சி செய்வதால்



'முதல் குடிமகன்' பெரிதில்லை உமக்கு

என் அன்னைக்கு நீர்

முதல் மகனாய் இருப்பதால்.


உம் அக்னிச்சிறகுகள் விரியட்டும்

ஆகாயாத்தேவர்களும்

அப்துல் கலாம் புகழ் பாடட்டும்.


(2004)

Comments

RaaM said…
Ithu nalla irukku :)
Divya said…
ஹாய் மதி,

ஒவ்வொரு வரிகளும் , வைரமாய் மின்னுது!
சூப்பர்!!

எழுச்சியூட்டும் கவிதை அருமை, மனமார்ந்த பாராட்டுக்கள் மதி!
Divya said…
ஆஹா....இப்பத்தான் இரண்டாம் முறை உங்கள் கவிதை படிக்கிறப்போ கவனிச்சேன்.....அகர வரிசைப்படி எழுதியிருக்கிறிங்க......அருமையான முயற்ச்சி!! வாழ்த்துக்கள் மதி!
தூள் கிளப்பு!
எழுத்துக்கள் தொடரட்டும்...
Anonymous said…
Hi Mathi,

Really Fantastic...

Durga.

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு