எனதருமை தீவிரவாதியே..!


அன்பிலா தீவிரவாதியே..!


அணுகுண்டு மேடைதனில்

ஆனந்த தாண்டவம்...!

முள் படுக்கைதனில்

தாம்பத்ய உறவு...!

சுகமென்று நீ நினைத்தாய்..!

சவந்தின்று ஏன் வாழ்ந்தாய்..!




இரத்த தாகம் கொண்ட நீ...

முத்தசுவை ருசித்ததுண்டோ..?



சுகம்தனில் வந்த சுமை

சுமைதாங்கி வந்த சுகம்

பூவொன்று கனிசுமக்கும் அழகு

"தாய்மை"- உணர்ந்ததுண்டா நீ..?



தன்னுயிர் தந்து வந்த உடல்

தலை வாரிக்கொள்ளும் அழகு-கண்டு

ரசிக்கும் தந்தைதன்மை

அடைந்ததுண்டோ நீ..??



குண்டோசை கேட்ட செவி

குழலோசைக்கு தலைசாயுமா...?

பதுங்கு குழிதனில் தான்

பாசக்காற்று வீசிடுமோ..?



குலம் சொல்லி பிரிந்திருந்தோம் -அன்று

மதம் சொல்லி மனிதகுலம் அழித்தாய்..இன்று..!



உன் செயலால்...


பள்ளி சென்ற பாலகனை

பையில் அள்ளி வருவதை

பார்த்ததில்லை நீ..!



கனவுகள் சுமந்து சென்ற

கடைசி மகன் காலை மட்டுமே

கண்டதை அறியவில்லை நீ...!



முத்தம் தந்து சென்ற நாயகனின்

முகம்கூட தெரியாமல் முனுங்கிய

இதயத்துடிப்பு கேட்டதில்லை நீ...!



கன்னத்தில் கன்னம் வைத்து

கன்னக் குழிதனில் சிறையெடுத்தவள்

காற்றுடன் கலந்ததை கண்டு

துடித்ததில்லை நீ...!



பிணங்களை தின்றவனே..

மனங்களை திருடு..!


உணர்வுகளை எரித்தவனே ...

உறவுகளைத் தேடு..!


துப்பாக்கி துறந்துவிட்டு - பெண் ஏட்டில்

விழிமொழி பயில்..!


ஜெலட்டினை மறந்துவிட்டு -புற்களின்

மேலழகை தொட்டுப் பார்..!


குண்டு மழை நிறுத்திவிட்டு -என்

குடும்ப குடைக்குள் ஒருநாள் நனை..!


தோட்டாக்கள் தொட்ட கைக்கு -என்

தங்கைகள் மருதாணி வைத்துவிடுவர்..!


இரத்தப்பசி நீ மறக்க - என்

அப்பா அறிவுப்பசி ஊட்டிடுவார்..!


மரணப் பாவம் உனை நீங்க - என்

அம்மா மண்சோறு சாப்பிடுவாள்..!


தீவிரவாதியே ...

என்னுடன் ஒருநாள்

வேண்டும் உனக்கு..!

மனிதவேர் அறுத்த நீ..

மலராக மலர்ந்து செல்ல...!

23-08-2008

Comments

Anonymous said…
A Salute is for your endeavor.
Anonymous said…
A Salute is for your endeavor.

Durga
Anonymous said…
Enn Anbulla Tamil Theeviravaathi,

It will be good to put in hindi version too. I don't think terroriest's could read tamil.

Once they read, I am sure they will becomes like U ; )

Good one. Keep more to update.
Divya said…
நீண்ட நாட்களுக்கு பின் கவிதை எழுதியிருக்கிறீர்கள்,மகிழ்ச்சி!!

கவிதை வரிகள் ஒவ்வொன்றும் நச்சென்று இருக்கிறது:))
Divya said…
வித்தியாசமான வகையில், சிந்திக்க வைக்கும் கருத்துடன் கவிதை அருமை!!

தொடர்ந்து எழுதுங்க மதி!!
என்ன கவிஞர் சதிஸ்..! இது புன்னகையா?? புண் நகையா...?
himathi
நன்றி துர்கா..!
நன்றி துர்கா..!
Enn Anbulla Tamil Theeviravaathi,

///It will be good to put in hindi version too. I don't think terroriest's could read tamil.

Once they read, I am sure they will becomes like U ; )

Good one. Keep more to update.////

மன்னிக்கவும் மாயக் கண்ணன்...! எமக்கு இந்தி மொழி தெரியாது!!

நன்றி நண்பரே!!
///நீண்ட நாட்களுக்கு பின் கவிதை எழுதியிருக்கிறீர்கள்,மகிழ்ச்சி!!

கவிதை வரிகள் ஒவ்வொன்றும் நச்சென்று இருக்கிறது:))///

நன்றி திவ்யா!! என்ன இருந்தாலும் தங்கள் கவிதையை போல இருக்காது!!
என் பேர ஒழுங்கா போடவும்!

அப்புரம் tag' போஸ்ட எழுது
Unknown said…
அழகான தமிழ்...வலி சுமந்த வரிகள்ன்னு... ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்க கவிதைகள் எல்லாமே..!! :))))
Unknown said…
//தோட்டாக்கள் தொட்ட கைக்கு -என்

தங்கைகள் மருதாணி வைத்துவிடுவர்..!


இரத்தப்பசி நீ மறக்க - என்

அப்பா அறிவுப்பசி ஊட்டிடுவார்..!


மரணப் பாவம் உனை நீங்க - என்

அம்மா மண்சோறு சாப்பிடுவாள்..!//

சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்...!! :))
Dr.ராம் said…
உங்களை பத்தி யாரோ எழுதியிருக்காங்க.. என்னன்னு கேளுங்க பாஸ்..

http://sakalakaladr.blogspot.com/

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு