சிங்கை தாய்




சொந்தங்கள் விட்டு வந்த எங்கள்
கந்தல் வாழ்வை மாற்றி வரைந்தாய்

கூரை வீட்டில் குழம்பிய எம்மை
மாடி வீட்டில் மயங்க வைத்தாய் 

வறுமை ஏட்டில் பட்டம் பெற்றவர்களை
பெறுமையோடு பல்லக்கில் தூக்கி வந்தாய் 

தமிழ்ச்சொந்தங்களின் குருதி சுவைத்தவர் மத்தியில்
தமிழ்மகனை முதல் குடிமகனாகக் கொண்டாய் 

வரலாற்று அதிசயமான என் மொழியை
அரசாங்க மொழியாக்கி அரியணை ஏற்றினாய் 

கருவறையில் சுமக்கவில்லை எனை நீயும் - இருந்தும்
முலைப்பால் எனக்களித்து என் உதிரம் கலந்த நீயும்
எனக்கு ஒரு தாயே ! சிங்கப்பூர் அன்னையே ! வாழ்க நீ பல்லாண்டு !

சிங்கை தாய்க்கு என் பிறந்தநாள் (09/08/2011) வாழ்த்துக்கள்!

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு