சுதந்திர தாய்




பட்டபாடு கொஞ்சமில்லை - என்
பாட்டனும் பாட்டியும்
பாரதத்தாய் உனை பாதாளச்
சிறையிலிருந்து மீட்க

செல்வத்தமிழ் மக்கள்
செக்கிழுத்துச் செம்மலாயினர்
செல்வி உன் அடிமை
விலங்கு அகற்ற 

நீயோ 

கடைசியாய் வந்த
காந்தியும் நேருவும் தான் உன்
கற்பு காத்ததாய்
கதைத்து நின்றாய்

இங்கிலாந்து ராணியிடம்
விடுதலை வாங்கி
இத்தாலி பணிப்பெண்ணிடம்
அடிமையாய் போனாய்

தீவிரவாத குண்டுகள் - உன்
முந்தானை இழுக்க,
மதவாத லீலைகள் - உன்
சட்டை கிழிக்க,
அரசியல்வாத ஊழல்கள் - உன்
உள்ளாடை உரிய

சுதந்திர தினத்தன்று
நிர்வாணமாய் நீ

பெற்றதாய் உன்னை
பலாத்காரம் செய்தவர்களை
பார்த்தும் - பழிவாங்காத
பாதக மகனாக நான் 

(13-08-2011)

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு