நுரை தின்றா பசி தீரும் ? - 2
நீந்திகளிச்ச ஊரணியின்று
நீச்சகுளமா வத்திப்போச்சு
நாலுகல்லுல கட்டியகோயிலு
நாலுசுவத்துக்குள்ள இடிஞ்சுபோச்சு
கூட்டா செஞ்ச சர்க்கரைச்சோறு
கூழப்போல மறைஞ்சுபோச்சு
எட்டிப்போடும் கோலிகுண்டு
எம்மனசு போல நொறுங்கிப்போச்சு
கபடியும் கண்ணாமூச்சியும்
காணாமத்தான் போயிடுச்சு
பல்லாங்குழி தாயத்தையும்
பள்ளம்தோண்டி புதைச்சாச்சு.
பசியே உணராத -இன்றைய
பள்ளிக்கூட உயிர்சிலைகள்
நுரையெது நிறையெது
பகுத்தெப்படி உணரும்?
பண்பாட்டை மறந்த
பகட்டுப் பெற்றோர்களே
பயமெதற்கு?
பசியெடுத்து அழுகையில்
பிள்ளைகள் பசியாற
புதிய செயலிலி ( application) வந்துவிடும்
கைப்பேசியில்!
Comments