2013 சுதந்திர தினம்



மேலாடை நீ உடுத்த
வாள் ஆடை உடுத்திய
வேலு நாச்சியின் வம்சம்
நான்

கன்னியுன் கற்பு காக்க
கப்பலோட்டி காசிழந்த
வ.உ.சியின் வாரிசு
நான் 

உன்கொடி மண் படாதிருக்க
தன்நாடி வானுக்கு ஈந்த
குமரனின் கொள்ளுப்பேரன்
நான் 

பூலித்தேவன் முதல்
காமராசர் வரை தன்
வாழ்விழந்து உனக்கு
வாழ்க்கையளித்த வம்சம்
எனது 

வாழ்த்தெப்படிச் சொல்லுவது ?

இன்னும் நான்
காவிரிக்கு கையேந்தி நிற்கும்போது 

மீன்பிடிக்கச் சென்ற என் அண்ணன்
கருவாடாய் திரும்பும் போது 



Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு