2013 காமராசர் பிறந்த தினம்


மதிய உணவுத்திட்டம்
சொல்லியிருக்க வேண்டும் உமது பெயரை
எழும்பிய அணைகளில்
எழுதியிருக்க வேண்டும் உமது பெயரை
தொழிற்பேட்டைகளின் நுழைவாயில்
சொல்லியிருக்க வேண்டும் உமது பெயரை
எதுவும் வேண்டாம் என்று நீ சொன்னதால்
உனை வேண்டுகின்றது என் மனசு

தமிழ் நாட்டை ஆண்ட
கடைசித் தமிழனே
முதல் அமைச்சராய் இருந்த
கடைசி மனிதனே 

மாறி மாறி கற்பழிக்கும்
விபச்சாரக் கும்பலிடமிருந்து
தமிழ் நாட்டை மீட்க
மீண்டும் பிறந்து வா !

பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் - நீ
பிறக்கும் நாளை ஆவலுடன்
எதிர் நோக்கும்


15-07-2013

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு