2014 பொங்கல்
பால் போல
மனசும் பொங்கட்டும்
கரும்பு போல
சொல்லும் இனிக்கட்டும்
மஞ்சகொத்து போல
உறவுகளும் இணையட்டும்
மாவிலை போல
உலகமும் பசுமையாகட்டும்
அரிசிமாவு கோலமிட்டு
எறும்புக்கும் உணவளித்த
இனமே
அஞ்சுக்கும் பத்துக்கும் மயங்காது
அரைசதுர விளைநிலமாயினும்
அன்னையாக நினைப்பது நமக்கு
நலமே
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
14-01-2014
Comments