இது ஒரு சிறுபுள்ளி



கட்டடங்கள் வளர்ந்து
கற்பழித்து விடுமென
கண்விழித்துக் காக்கின்றன
கார்முகிலை நட்சத்திரங்கள் இங்கு 

வளர்ந்தது ஓரிடம்
வாழ்வது வேறிடமாயினும்
வாஞ்சையுடன் வாழென்கின்றன
வாசனையோடு மரங்கள் இங்கு 

மஞ்சள் தோலுக்கும்
மங்கிய தோலுக்கும்
மனுநீதி ஒன்றென
மார்தட்டும் சட்டங்கள் இங்கு

பல புள்ளிகள் உருவாக்கும்
ஒரு கோலம் 
பல கோலங்கள் உருவாக்கிய
ஒரு புள்ளி .

லீ அய்யாவின் கண்ணீர்
விழுந்து உருவான
சிங்கப்பூர் என்னும் சிறுபுள்ளி 

2013 நவம்பர் மாத கவிமாலையில் பரிசு பெற்றது

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு