இயந்திர மின்ணணுவியல்
பகலும் இரவும் சங்கமிக்கும் அந்தி நேரத்தில்
இருக்கும் அந்திவேளைச் சூரியனே
உன்னிடம் ஒளியை மட்டுமே கண்டேன்
நிலவுப் பெண்ணை திருமணம் செய்து
கொண்ட இரவு மாப்பிள்ளையே
உன்னிடம் குளிர்ச்சியை மட்டுமே கண்டேன்
அழகை ரசிக்கும் கண்களே- உன்னிடம்
காந்த சக்தியை மட்டுமே கண்டேன்
11/2 மி.மீ திருக்குறளான எறும்பே
உன்னிடம் சுறுசுறுப்பை மட்டுமே கண்டேன்
ஆனால்,
இவை அனைத்தையும் ஒன்றில் மட்டுமே
கண்டேன் படித்தேன் ரசித்தேன்
என்ன அது
எட்டாவது உலக அதிசயமா
விண்ணவர் படைப்பா
இல்லை.இல்லவே இல்லை
மண்ணவர் உருவாக்கிய மகத்தான
சரித்திரம் அது
விண்ணவரும் மண்ணவரும் நாளை
மலர்தூவி வரவேற்கும் காவியம் அது
இயந்திர மின்ணணுவியல் ( MECHATRONICS)
என்னும் எங்கள் கல்வித் துறையே
இத்துணை பெருமைக்கும் உரியது
இதோ
இந்த நான்காண்டு குழந்தை - தனது
5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது
இதோ
இந்த காவியத்தின் ஐந்தாம் பாகம்
எழுதப்பட போகின்றது
இதோ
இந்த குழந்தை
என்றைக்கும் வளம் குறையா
தமிழ் போலவும்
புகழ் குறையா நம்
கல்லூரியைப் போலவும்
நமது H.O.D யின் மழலைச்
சிரிப்பு போலவும்
நமது ஆசிரியர்களின் அன்பான
அரவணைப்பு போலவும்
நம்மைப் போன்ற இளைஞர்களின்
வீரத்தைப் போலவும்
வாழ, வளர்ந்திட
இன்று பிறந்த நாள் விழா காணும்
இந்த குழந்தை
மணிவிழா காண வாழ்த்தி வாழ்த்தி
இறைவனை வேண்டுகின்றேன்
PSG TECH ல் MECHATRONICS ENGG ASSOCIATION 5 ஆம் ஆண்டு INAGURAL FUNCTIONல் படைத்தது. 2001
Comments