விளை நிலம்


காதலியின் தலைவகிடு..
நடந்து செல்லும் 
வரப்பாய் தெரிந்திடும்
காதலன் உதடுகளுக்கு

கறைபடிந்த கரங்களை
தரணியிலே பார்க்கையில்
சிரத்தினிலே தோன்றிடும்
வார்த்தைதான் களையெடுப்பு

நட்ட நடு நிசியில்
நட்சத்திரப் பயிர் முளைத்து
வெள்ளைக் கிணறு கொண்டு
காட்சிதரும் வானவெளி
விளை நிலமாய்

ராணுவமாய் அணிவகுத்து
மாணவர்கள் காலை
வணக்கம் பாடுகையில்
தோன்றிடுமே பள்ளிகளும்
விளை நிலமாய்

எழுத்துக்களைத் தூவிவிட்டு
முளைத்திடும் பக்கங்கள்
எழுத்தாளனுக்கு தோன்றும்
என்றும் விளை நிலமாய்

உவமைகளாக மட்டுமே
உயிர்வாழ்கின்றது இன்று
உண்மையான விளை நிலம்

வீட்டு மனைகளாக அதைப்
புதைத்தவர்களுக்கு
குன்றட்டும் மன நலம் 

22-02-2014 சிங்கப்பூர் கவிமாலையில் முதல் பரிசு பெற்றது

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு