ஆசை

அல்லிப்பூவாய் மலர்ந்த பெண்சிசுக்கு
ள்ளிப்பாலிடம் தப்பிக்க ஆசை 

சிரித்து விளையாடும் சிறுமிக்கு
சிற்றாடை மேல்கொள்ளை ஆசை 

பள்ளி செல்லும் பாவைக்கு
படிப்பில் மட்டும் பேராசை 

பருவம் வந்த பெண்ணுக்கு
நாணப்பட சின்ன ஆசை 

சேலை உடுத்தும் முன்பே
வேலை செல்ல ஆசை 

வேளை வந்த பின்தான்
மாலை மாற்றக்கூட ஆசை 

கரம் பிடித்தவன் மடியினிலே
சிரம் சாய்க்க மனைவிக்காசை

பேரன் பேத்தி கண்டுவிட்டு
நாடியடங்க பாட்டிக்கு ஆசை 

பிறப்பிலிருந்து இறப்புவரை
பெண்ணுக்குத்தான் எத்தனை ஆசை ?

அத்தனை ஆசை எனக்கில்லை 
நிறைவேறுமா என் ஒரே ஆசை ?

விளக்கு அணைஞ்ச பின்னும்
யாரும் அணைக்காமத் தான்
தனியே தன்னந் தனியே
நானுறங்க பலநாளா ஆசை !

சிகப்பு விளக்கினிலே
அணைத்தால் எரியும்
கலவித் திறனாளி நான்

வேறென்ன கேட்க 

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு