நவீன சமூகம் உண்மையான காதலையும் அன்பையும் மதிக்கின்றதா ? மதிக்கலையா ? -பட்டிமன்றம்


நவீன சமூகம் உண்மையான காதலையும் அன்பையும் மதிக்கின்றதா ? மதிக்கலையா ?

மதிக்கவில்லை :

( பாடல் - தொடக்கம் )

இன்னைக்கு காதலெல்லாம்
ரொம்ப ரொம்ப மாறிடுச்சு
கண்ணப் பாக்குது
கையக் கோக்குது
ரூமு கேக்குது
எல்லாம் முடிஞ்ச பின்னும்
ஃப்ரண்ட்னு சொல்லிகிட்டு
வாழுறவங்க ரொம்பபேருடா
கேட்டுப்பாருடா !

அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குறான்
அவ செலவு செய்யத்தான் ஒரு லூச தேடுறா
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறா
ரொம்ப புளிச்சு போச்சுனா கைகுலுக்கி பிரியிறா..

ஆம்பிள்ளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அதை காதலுனு சொல்லுறாங்க அந்த மூவரும் ..

( பாடல் - நிறைவு )

அனைவருக்கும் வணக்கம்.

எதிர்பார்ப்பு இல்லாதது
நிபந்தனை விதிக்காதது
சுயநலம் பார்க்காதது
எதையும் கொடுத்தே பழக்கப்பட்டது
எதையும் எடுக்கத் தெரியாதது
உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது
உடலையோ மனதையோ ஒருபோதும் காயப்படுத்த நினைக்காதது
வலிகளைத் தாங்கி கொள்ளுவது
முழுமனதோடு நேசிக்கச் சொல்லுவது
அன்போடு அரவணைப்பைத் தருவது
கவனித்துக் கொள்ளத் தூண்டுவது
அக்கறை காட்டுவது
கசந்து போகாதது
புதுமலராய் மணம் வீசுவது
எண்ணங்கள் கூடுவது

இதுதாங்க உண்மைக் காதல்.. எதிரணியினர் நெஞ்சத் தொட்டு சொல்லுங்க.. இப்ப இருக்கிற காதல்ல மேல சொன்னதுல ஏதாவது இரண்டு பண்புகள் இருக்கானு..

இன்னைக்குள்ள காதல சொல்லனும்னா இரண்டே இரண்டு வார்த்தைகள் தான்.. Pick up.. Break up..

பசங்க பேசுறத கேட்டுப் பாருங்க ." மச்சி .. சூப்பர் பிகரா அது.."  " என்னடா பன்ன? .." நேத்தே பிக்கப் ஆயிடுச்சு மச்சி" " அப்பறம் ?" ,
" அப்பறம் என்ன . ..நாகிறதன...தினன..."

பொண்ணுக பேசுறத கேளுங்க " ஏய்,, என்னடி திடீர்ன்னு எங்கேஸ்மண்ட்ன்னு சொல்ற" .." ஆமாடி.. உனக்குத்தான் தெரியுமில..எனக்கு US ல போய் MS பண்றதுதான் லட்சியமுன்னு..அதாண்டி ஒரு அமெரிக்க வரன் வந்துச்சு,,வீட்ல சொன்னாங்க,, ஒத்துக்கிட்டேன்.." " அடிப்பாவி.. அப்ப இவ்வளவு நாள் காதலிச்சியே.. ரமேஷ்.. ? .. அது BREAK UP டி..

இப்படித்தாங்க இருக்கு இன்னைக்குள்ள காதல்..

இப்பல்லாம் உள்ளத்தின் தேடல் இல்லை..உடலின் தேடல் தான் இருக்கு..
விசாலப் பார்வை இல்ல.. விகாரப் பார்வைதான் இருக்கு ..
கண்ணறையில் தோன்றி மணவறையையும் தாண்டி கல்லறையில் முடியணும் உண்மையான காதல்.. ஆனா இன்னைக்கு
சில்லறையில் தோன்றி ஏதாவது ஹோட்டல் அறையில் முடியுது"
அன்னைக்கு காதல்ல தோத்தவன் தாடி வைப்பான்.. ஆனா இன்னைக்கு தாடி வச்சவனுக்குத்தான் காதலியே கிடைக்கிறா.."

நடுவரய்யா.. நாமெல்லாம் WALKING TOGETHER.. EATING TOGETHER கேள்விபட்டிருப்போம் ..இப்ப புதுசா ஒன்னு கண்டுபிடிச்சிருக்காங்க.. LIVING TOGETHER.. அதாவது திருமணம் பண்ணிக்காமயே ஒரு ஆணும் பெண்ணும் ஒன்னா ஒரே வீட்டுல ஒரே ரூமுல வாழலாம்.. திருமண பண்ணிக்கனும்னு தோணுச்சுனா, அவர் ஒரு கிராமத்து பொண்ணையும் .. அந்தம்மா ..ஒரு அமெரிக்க பையனையும் கல்யாணம் பண்ணிகிட்டு போயிடுவாங்க.இதுகள விடுங்க..எல்லாரும் யோசிச்சி பாருங்க.. தனக்கு ஒரு நல்ல துணை வரணும்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிற  , இவங்கள கல்யாணம் பண்ணிக்கிறபோற அந்த அப்பாவிகளோட உண்மையான காதல் எப்படி மிதிக்கப்படுதுன்னு..

சரி.. காதல் வாழ்க்கையில தான் இப்படி.. கல்யாண வாழ்க்கையாவது உண்மையான அன்பா இருக்காங்களா ? இல்லை..கல்யாணமாயி 2 மாசம்தான் ஒன்னும் ஒன்னும் கை பிடிச்சி நடக்கிறதெல்லாம் ..2 மாசம் முடிஞ்சிச்சினா.. ஒரு 100 மீட்டர் இடைவெளி வந்துரும் நடக்கும்போது .. 6 மாசம் முடிஞ்சா.. தேக்கால பெருமாள் கோவில்கிட்ட மனைவி நடந்துச்சுன்னா.. கணவன் தேக்கா மார்க்கெட்ல ந்டப்பாரு..ஒரு வருசத்துல.. நீங்களே தனியா போயிட்டு வந்துருங்க..." இதுதாங்க எல்லாரு குடும்பத்துலயும் நடக்குது..

சில மாதங்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி சொன்னாங்க.. " இன்னைக்கு இருக்கிற பரபரப்பான உலகத்துல சந்தோசமே போச்சு.. ஒன்னுமில்ல.. நானும் என் கணவரும் முத்தம் கொடுத்து ஆறு மாசம் ஆச்சு.." இது அந்த ஒரு குடும்பத்துல மட்டுமில்ல.. கிட்டத்தட்ட எல்லாரு குடும்பத்துலயும் நடந்துகிட்டுதான் இருக்கு..

தனிமை வேணும் .. அன்பா இருக்கணும் தானே தனிக்குடித்தனம் வந்தோம்.. ஆனா இன்னைக்கு அந்த தனிக்குடித்தனத்துலேயே எவ்வளவு பிரச்சினை..யோசிச்சு பாருங்க.. எவ்வளவு பெரிய ஆலமரமா இருந்த கூட்டுக் குடும்பத்த வெட்டி வீழ்த்திட்டு வந்து உக்காந்திருக்கோம்..
சின்ன சின்ன பிரச்சினையெல்லாம் பெரியவங்க கூட இருந்திருந்தாங்கன்னா எவ்வளவு எளிமையா தீர்த்து வைச்சிருப்பாங்க .. .
அம்மா.. அப்பா ...பெரியப்பா.. பெரியம்மா..சித்தப்பா..சித்தி..மாமா.. அத்தை..அத்தான்.. அத்தாச்சி.. தாத்தா.. பாட்டி..மச்சினன் .. மச்சினச்சி..நாத்தனார் .. கொழுந்தனார்.. அண்ணன் .. தம்பி.. அக்கா.. தங்கை.. மாமனார்.. மாமியார்..அப்பத்தா.. பங்காளி.. இப்படின்னு இருந்த உறவுகள.. இன்னைக்கு அங்கிள்.. ஆண்டின்னு ஒரே வார்த்தையில முடிச்சிட்டோம்..சுருங்கினது வார்த்தைகள் மட்டுமில்லங்க...உறவுகளும் .. அந்த உறவுகளுக்கிட்ட இருந்த உண்மையான அன்பும் தான் ..

நட்பு வட்டாரத்துலயும் நம்ம எல்லாரும் உண்மையாவ பழகுறோம்.. எதையாவது எதிர்பார்த்து.. பழகுறவங்ககிட்ட ஏதாவது ஒண்ணு நடக்கனும்னுதானே பழகுறோம்....

சரி.. மனிசங்க மத்தியில தான் உண்மையான அன்பு இல்லன்னு .. சாமிக்கிட்டேயாவது உண்மையான அன்பும் காதலும் மனுசங்க வச்சிருக்காங்களா ? அதுவும் இல்ல..பழைய பக்தி இலக்கியங்கள படிச்சி பாத்தீங்கன்னா தெரியும்.. இறைவன் மேல எவ்வளவு அன்பு .. எவ்வளவு காதல்..
ஒரு பாடல்ல பாருங்க.." ஆடையிலே எனை மணந்த மணவாளா..பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கணிந்தருளே.." னு ஒரு ஆண் துறவி, தன்னை பெண்ணா பாவிச்சிக்கிட்டு,,சிவன் ஆடையில் தன்னை மணந்து கொண்டுவிட்டதாக பாடுவார்.. அந்த அளவுக்கு ஒரு உண்மையான அன்பு .. காதல்..

இன்னைக்கு பாருங்க.. கோவிலுக்குப் போன நிம்மதியாவ சாமி கும்பிடுறோம்..வெளிய இருக்க செருப்பு என்னவாகும் .. கோவில்ல பிரசாதம் கொடுப்பாங்களா.. மாட்டங்களா.. ? பொண்டாட்டிய கூட்டிட்டு வந்திருக்கோமே...முஸ்தபாவுக்கு கூட்டிட்டு போயிருவாளோ .. " இத்தனையும் சாமி கும்பிடுற அந்த 5 நிமிசத்துல மனசில வந்துட்டு போகும்.. இதுதான் இன்னைக்கு இருக்க சாமி மேல இருக்க அன்பு, பக்தி ..காதல் எல்லாம் ..

இன்னைக்கு உண்மையான காதல் இருக்குன்னா.. ஒரே ஒரு இடத்துல மட்டும்தான் இருக்கு.. அது வேறயெங்கும் இல்ல.. ஒரு நடிகங்கிட்ட அவனோட ரசிகன் வச்சிருக்கிற அன்பு.. வெறித்தனமான அன்பு.. உயிரயே அந்த நடிகனுக்காக கொடுக்கிறான்..
நடுவர் அவர்களே .. யோசிச்சி பாருங்க.. அவன் செய்யிறது சரியா தப்போ.. ஆனா இரத்த சம்பந்தமில்லாத ஒருத்தங்கிட்ட அவன் வச்சிருக்கிறது உண்மையான அன்பு.. இந்த சமூகம் அந்த அன்பை மதிக்கலனாலும் பரவாயில்ல..ஆனா அந்த நடிகனாவது மதிக்கிறானா.. கிடையாது...

ஆக தனிமனித வாழ்க்கையிலயும் சரி.. உறவுகள் மத்தியிலும் சரி..சமூக வாழ்க்கையிலும் சரி.. உண்மையான அன்பை இந்த நவீன உலகம் மதிப்பதில்லைன்னு சொல்லி விடைபெறுகின்றேன்.. நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு