கறவைப்பசு


காலை வேளையில்
கன்றுடன் கறவைப்பசு
வீட்டு வாசலில்..

லட்சுமியே வந்ததாக
அம்மா பரவசப்பட

அரிசிவெல்லத் தட்டுடன்
தங்கை ஓடிவர

வேடிக்கை கிடைத்ததென
மனைவி குழந்தைக்கு உணவூட்ட

மரத்தை அழித்து
மழையைத் தடுத்து
பசுமையைக் குலைத்ததற்கு

உண்ண உணவின்றி
காய்ந்த வயிறுடன்
பசு தொடுத்த அந்த
சாபப் பார்வை

உக்கித் தலைகுனிய
வைத்தது என்னை !

18-05-2014

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு