பயணம்


விடியும் வரைதான்
நிலவின் பயணம்
செடிகள் சொல்லிவிடும்
காற்றின் பயணம்

புள்ளிகள் முடித்துவிடும்
எழுத்தின் பயணத்தை
தேர்வுகள் தேர்ந்தெடுக்கும்
பள்ளியின் பயணத்தை

ஊடலின் பயணம்
கூடலோடு நின்றுவிடும்
கூடலின் பயணம்
அரவணைத்தலில்அடங்கிவிடும்

முடிவுள்ள பயணங்கள்
முட்டிமோதி நின்றாலும்
முடிவில்லா எண்ணத்தின் பயணங்கள்
முந்திக்கொண்டு வாகை சூடும் 

ஏரிக்கரையிலிருந்தும்
எரிமலையில் ஏறி விடும்..
ஏவுகணையில் பூ வைக்கும்...
ஏவாளை வம்புக்கிழுக்கும்..
ஏதன்ஸ் நகரைச் சுற்றிவரும் ..
எல்லைதான் உண்டோ
மனித எண்ணங்களுக்கும் ..
அதன்  பயணங்களுக்கும் 

06/11/2013

(நவம்பர் மாத தங்கமீன் வாசகர் வட்டத்தில் பரிசு பெற்றது.)

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு