முதல் நீ
இலட்சம் அணுக்கள்
கொன்றுவிட்டு ஒருவன்
மட்டும் மன்னனாய்
முடிசூடும் உலகின்
முதல் போர்க்களம் நீ
கருவின் வடிவம்
வளர வளர
தன் வடிவம்
மாற்றிக் கொள்ளும்
உலகின் முதல்
பொறியாளர் நீ
உச்சபட்ச வலிகண்டு
உயிர்மீண்ட சூழலிலும்
மழலை முகம் கண்டு
அகம் மலரும் உலகின்
முதல் மகாத்மா நீ
பகலெல்லாம் பாத்திருந்து
இரவெல்லாம் விழித்திருந்து
பகலிரவு தெரியாத
உலகின் முதல்
கோள் நீ
உதிரத்தைப் பாலாக்கி
உணவாக எனக்களித்த
உலகின் முதல்
கொடையாளர் நீ
அம்மா ...
என்
முதல் உறவென
உன்னைச் சொன்னால்
உறவு முந்திக் கொள்ளும்
எனக்கான..
என்னுடைய ..
எல்லாவற்றிலும்..
முதல் நீ
---------------------
04-02-14
(பிப்ரவரி 2014 தங்கமீன் வாசகர் வட்டத்தில் பரிசு பெற்றது. தங்கமீன் இணைய இதழிலும் இடம் பெற்றது)
http://www.thangameen.com/Archieves/ContentDetails.aspx?tid=818&iid=60
(பிப்ரவரி 2014 தங்கமீன் வாசகர் வட்டத்தில் பரிசு பெற்றது. தங்கமீன் இணைய இதழிலும் இடம் பெற்றது)
http://www.thangameen.com/Archieves/ContentDetails.aspx?tid=818&iid=60
Comments