சாதிப் பதாகை
பார்வையிலே சாதிச்சவரு
பாவமா நிக்கிறாரு
முக்குலத்தோர் கூட்டத்தில் மட்டும்
நாட்டையே புரட்டிய உருவம்
நாணயத்தின் உயிர் வடிவம்
கலைமகளின் தகப்பனான காமராசர்
கவலையோடு வாழ்த்துறாரு
நாடார் வீட்டு திருமணத்தை
கப்பல் விட்ட காட்டாறு
செக்கிழுத்த செல்வந்தன்
சிங்கம் போன்ற சிதம்பரம் ஐயா
வேந்தனாய் தெரிகிறாரு
வெள்ளாளனுக்கு மட்டும்
சாதிச்ச சிகரங்கள்
சாதியின் தகரங்களாய்
மாறிப்போன மாயமென்ன
அரசியல் வியாதிகளிடமிருந்து
அறிவில்லா இளைஞர்கள் இதைக்
கற்றுக்கொள்ள தேவையென்ன
சாதிய இளைஞர்களே ...
ஒன்று சொல்கின்றேன்
இன்றே செய்திடுங்கள்
தேசத்தின் தெய்வங்களை
சாதியின் தலைவர்களாக
மாற்றுவதற்குப் பதில்
உங்கள் வீட்டு
முந்தானைகளை
முச்சந்தியில்
விற்றுக்கொள்ளுங்கள்
உங்கள்
வருமானமாவது
பெருகட்டும்
22-11-2013
பாவமா நிக்கிறாரு
முக்குலத்தோர் கூட்டத்தில் மட்டும்
நாட்டையே புரட்டிய உருவம்
நாணயத்தின் உயிர் வடிவம்
கலைமகளின் தகப்பனான காமராசர்
கவலையோடு வாழ்த்துறாரு
நாடார் வீட்டு திருமணத்தை
கப்பல் விட்ட காட்டாறு
செக்கிழுத்த செல்வந்தன்
சிங்கம் போன்ற சிதம்பரம் ஐயா
வேந்தனாய் தெரிகிறாரு
வெள்ளாளனுக்கு மட்டும்
சாதிச்ச சிகரங்கள்
சாதியின் தகரங்களாய்
மாறிப்போன மாயமென்ன
அரசியல் வியாதிகளிடமிருந்து
அறிவில்லா இளைஞர்கள் இதைக்
கற்றுக்கொள்ள தேவையென்ன
சாதிய இளைஞர்களே ...
ஒன்று சொல்கின்றேன்
இன்றே செய்திடுங்கள்
தேசத்தின் தெய்வங்களை
சாதியின் தலைவர்களாக
மாற்றுவதற்குப் பதில்
உங்கள் வீட்டு
முந்தானைகளை
முச்சந்தியில்
விற்றுக்கொள்ளுங்கள்
உங்கள்
வருமானமாவது
பெருகட்டும்
22-11-2013

Comments