To Diploma Seniors
அறுபதாண்டு சித்திரமே - எங்களை
ஆளாக்கிய பூ.சா.கோ (P.S.G) அறிவுச் சத்திரமே
கவிதை பாடச் சொல்லிவிட்டார்கள் உன்னைப்பற்றி
காலத்தால் அழியா வரலாற்று ஓவியமல்லவா நீ
வல்லோர் பல்லோரால் உருவாக்கப்பட்ட
இரும்புக்கோட்டையல்லவா நீ
வீரத்தின் விளைநிலமே
நீ உருவாக்கிய விதைகளே
இன்றைக்கு பல விதைகளை
உருவாக்கிக் கொண்டிருக்கின்றன
இளம்பூவே
உன்னில் பருகிய தேனையே
இன்றைக்கு பலருக்கு பந்தி
வைக்கின்றன வண்டுகள்
வற்றாசமுத்திரமே
உனக்குள் முத்தெடுத்தவர்கள்
இன்றைக்கு பல சமுத்திரத்தையே
உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்
ஆம்
நீ உருவாக்கிய அறிஞர்களே
பல அறிஞர்களை இன்று
உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்
இதைவிட ஒரு தாய்க்கு பெருமை வேண்டுமா
இதோ
இந்த நந்தவனத்தில் பூத்த
பூக்கூட்டம் ஒன்று
மாலையாகப் போகின்றது
அண்ணன்களென்று ஓடிவந்த நாங்கள்
இன்று அண்ணனாகி நிற்கின்றோம்
அண்ணன்களான நீங்களோ கல்லூரியை
விட்டு போகப் போகிறீர்கள்
மூன்றாண்டு சிற்பத்தை செதுக்க வந்தோம்
உளியாக நீங்கள் இருந்தீர்கள்
சிற்பத்தைச் செதுக்கிவிட்டு நீங்கள் போகிறீர்
உளிகளாய் நாங்கள் மாறிவிட்டோம்
எங்களுக்கு இமையாக இருந்த நீங்கள்
இனி உலகிற்கு குடையாக மாறுங்கள்
நட்சத்திரங்களாய் இருந்த நீங்கள்
இனி ஒளி கொடுக்கும் நிலவாக மாறுங்கள்
வண்ணத்துப்பூச்சிகளாய் பறந்த நீங்கள்
இனி வாழ்க்கையில் வசந்தத்தையே சுவாசியுங்கள்!
2000 ஆம் ஆண்டு P.S.G Tech college day ( Tech day )ல் seniors க்காக படைத்தது. Tech Talk 2001( Magazine ) லும் இடம் பெற்றது
Comments