உன்னை நினைத்து
கந்தபுராணம் எழுதிய ஈவெரா
கடவுளில்லை என்றதும் நீர்தானோ ( சுமங்கலி படத்தில் கடவுள் இல்லை என்ற பாடலை வாலி எழுதினார் )
கோபாலாபுரத்தின் கோமகன்
ராமாவரத்தின் ரங்கராசன் ( ஆண்டவனே என்றுதான் எம்ஜிஆர் அழைப்பார் )
கண்ணதாசனிடமே கர்ஜித்தாய்
சாவியிடமே சவாலிட்டாய்
இரட்டைக்கிளவி ஆராயும் வயதில்
இரட்டை அர்த்தப் பாடல்கள்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
முழங்கிய குரல்தான்
முக்காப்புலாவையும் முனங்கியது
முரண்களின் கொதிகலன்
கொச்சைகளின் கொள்கலம்
இப்படி எத்தனை வசவுகள்
இடிகளாய் வந்தவற்றை
படிகளாய் மாற்றினாய்
கவிக்கு இல்லை தாலி
வாலிக்கு இல்லை வேலி
மூச்சிழக்கும் போதும்
"சுவாசம்..மிகவும் மோசம்" - என்று
தமிழோடு விளையாடினாயே...
உம்மைப்போல் குறும்புக்கவி
உலகில் இங்கு யாரப்பா
தமிழுள்ளவரை வாழும்
உன்னை நினைத்து
எதற்கு இரங்கற்ப் பா
27-06-13
இப்படி எத்தனை வசவுகள்
இடிகளாய் வந்தவற்றை
படிகளாய் மாற்றினாய்
கவிக்கு இல்லை தாலி
வாலிக்கு இல்லை வேலி
மூச்சிழக்கும் போதும்
"சுவாசம்..மிகவும் மோசம்" - என்று
தமிழோடு விளையாடினாயே...
உம்மைப்போல் குறும்புக்கவி
உலகில் இங்கு யாரப்பா
தமிழுள்ளவரை வாழும்
உன்னை நினைத்து
எதற்கு இரங்கற்ப் பா
27-06-13
Comments