விளம்பரம்



விளக்கொன்று கொடுத்துவிட்டு,
வெளியே செல்ல வழியின்றி
ஒளியையும் குழம்ப வைக்கும்
'உபய' விளம்பரங்கள் 

காசைக் கட்டடமாக்கி
கல்வியை காசாக்கும்
கட்டணக் கழிவறையில் சேர
கல்விநிலைய விளம்பரங்கள் 

வரிச்செய்தியில் வசிப்பவனை
தலைப்புச்செய்தியில் தலைவனாக்கி
கலைத்தாயின் ஆண்வடிவென
சிலையெடுக்கும் சினிமா விளம்பரங்கள் 

கலவரங்களைப் போல
விளம்பரங்கள் சூழுமுலகில்
கிராமத்து டீக்கடையில்
புகைக்கரி பூசிக்கொண்டு
கிழிந்து தொங்குகின்றது
வள்ளி திருமண நாடகத்தின்
விளம்பரமும் ஆயுளும் 

ஏப்ரல் மாத கவிமாலைக்கு கொடுத்தது

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு