வீடு


வாஸ்துப்படி வாசற்படி
செயற்கைச் செடிகள்
நளினமான நாற்காலிகள்
கண்கவர் கண்ணாடிகள்
ஆடையின்றி பெண்சிலை
பளபளக்கும் பளிங்குத்தரை
சிந்திக்கும் ஓவியங்கள்
வாங்கிய விருதுகள்
படிக்காத புத்தகங்கள்
மணிக்கதவோடு பூசையறை
புகையில்லாத சமையலறை
பிள்ளைகளின் புகைப்படம்
சத்தமில்லா சங்கீதம்

அழகான வீடுதான் 

ஆதரவற்றோர் இல்லத்தில்
அன்னையை விட்டுவந்த
கண்களுக்குத் தெரிந்தது
அலங்கரித்த சுடுகாடாய் 


Comments