முரண்
முரண்
வலிமையான வேர்கள்
பாதுகாப்பாக மண்ணுக்குள்.
கிழிந்துவிடும் இலைகள்
காற்றோடு போராட்டத்தில்
இயற்கையின் முரண்
வாழ்க்கையின் தேவைக்காக
உருவான பணம்.
பணத்தின் தேவைக்காக
மாறிப்போன வாழ்க்கை
செயற்கையின் முரண்
தம்பிக்காக மண்ணாசை
துறந்த வீரராமன்.
மண்ணுக்காக அண்ணனைக்
கொன்று கோழையானான்
இதிகாச முரண்
கூடலுக்காக ஏங்குவோம்
பிரிந்திருக்கும் தருணம்.
ஊடலையே ஊக்குவிப்போம்
சேர்ந்திருக்கும் நேரம்
தாம்பத்ய முரண்
முரண்களோடு வாழ்வது
மனிதத் தன்மை
கருவறை தந்தவளுக்கு
முதியோர் இல்லம் ஒதுக்கி
மனிதனே முரணாவது
உள்ளதிலே கொடுமை
( அக்டோபர் 2013 கவிமாலையில் பரிசு பெற்றது )
வலிமையான வேர்கள்
பாதுகாப்பாக மண்ணுக்குள்.
கிழிந்துவிடும் இலைகள்
காற்றோடு போராட்டத்தில்
இயற்கையின் முரண்
வாழ்க்கையின் தேவைக்காக
உருவான பணம்.
பணத்தின் தேவைக்காக
மாறிப்போன வாழ்க்கை
செயற்கையின் முரண்
தம்பிக்காக மண்ணாசை
துறந்த வீரராமன்.
மண்ணுக்காக அண்ணனைக்
கொன்று கோழையானான்
இதிகாச முரண்
கூடலுக்காக ஏங்குவோம்
பிரிந்திருக்கும் தருணம்.
ஊடலையே ஊக்குவிப்போம்
சேர்ந்திருக்கும் நேரம்
தாம்பத்ய முரண்
முரண்களோடு வாழ்வது
மனிதத் தன்மை
கருவறை தந்தவளுக்கு
முதியோர் இல்லம் ஒதுக்கி
மனிதனே முரணாவது
உள்ளதிலே கொடுமை
( அக்டோபர் 2013 கவிமாலையில் பரிசு பெற்றது )
Comments