ஊடல்


என் வறட்டுக் கெளரவம்
உன் வீம்பு மெளனம்
மின் விசிறிச் சத்தம்
தனிமையான தலையணை
பேசிக் கொண்டிருக்கும்
நமது ஊடலை 

அவைகளை ஊமையாக்கும்
எனக்கு வந்த இருமலும் - என்
நெஞ்சு தடவிக் கொடுத்த‌
உன் விரல்களும் 

19-08-2013

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு