அதுவே சிறப்பு


தமிழ்க் கிழவி
துளைத்து ஏழுகடலைப்
புகட்டிய பின்பே
அந்நிய மூளையில்
முளைத்தது அணு

செடிகளைச் சாறாக்கும்
இயற்கையை உணவாக்கும்
சித்தர்களின் மருத்துவம்
தமிழர்களின் மகத்துவம் 

வாய்பிளக்கும் வானாய்வு
வானுயர்ந்த வாணிபம்
சிலிர்த்திடும் சிற்பக்கலை
சிகரமான வாழ்வியல்

சிறப்புகளால் செய்தது
தமிழர் உடம்பு - அதில்
உயிராய் ஓடுவது
மொழியுணர்வு 

மணலில் உருப்பெற்று
ஓலையில் தவழ்ந்து
நூலில் சிரித்து
கணிப்பொறியைக் கவ்வி
கைத்தொலைபேசியில்
கண்ணடித்து
மீனங்குடி கம்பனையும்
காரைக்குடி கருப்பனையும்
சிங்கையில் சேர்த்திடும்
மொழியுணர்வே - தமிழர்களின்
சிறப்புக்கெல்லாம் பொறுப்பு - அதுவே
நமக்கு சிறப்பு 

(28/12/13 சிங்கப்பூர் கவிமாலையில் பரிசு பெற்றது)

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு