சந்திப்பு


காற்றோடு கலவிகொண்டு
களைத்துப் போன இலைகள்
மண்ணையும்,

சிப்பிக்குள் சிறைபட்டு
சிணுங்கும் முத்துக்கள்
கரையையும்,

புற்களில் போர்வையாக
பூத்திருந்த பனித்துளி
கதிரவனையும்,

இளைப்பாற நேரமின்றி
இயங்கிடும் இளமை
முதுமையையும்,

உச்சி வெயிலில்
உழைத்தவன் வியர்வை
தென்றலையும்,

முன்னோர்கள் முத்தத்தில்
முளைத்த நம் மரபுகள்
நவீனத்தையும்,

மகிழ்ச்சியாகவே சந்திக்கின்றன - தன்
மரணத்தைத் தெரிந்தும் !

01-03-2014
மார்ச் 2014 தங்கமீன் வாசகர் வட்டத்தில் பரிசு பெற்றது. தங்கமீன் இணைய இதழிலும் இடம்பெற்றது

http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=829

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு