அடையாளம்

மணல் வீட்டில்
மயங்கிய என்னை
மாடி வீட்டில்
மலர வைத்தாய் 

விடுபட்டுப் போன
விடலை நட்பையும்
விரல் அசைவில்
விருத்தி செய்தாய் 

தொலைபேசியில் தொலைந்த
தொப்புள்கொடியின் சிரிப்பை
தொடும் தூரத்தில் கண்முன்னே
கொண்டு வந்தாய் 

வங்கி வரிசையில் நின்று
வலித்திருந்த கால்கள் இன்று
வலைத்தளத்தில் பணம் அனுப்பி
வசதியாக ஓய்வெடுக்கின்றன 

கஃப் சாலையிலிருந்தும் ( cuff road)
கலிபோர்னியா தெரிகின்றது 
கடல்கள் பிரித்தாலும்
கண்களால் இணைக்கும்

கணிப்பொறியே 

வலைத்தளத்தை நெய்தவனே
வலைக்குள்ளே மாட்டிவிட்டேன்.

இருந்தும் பெருமைதான்
உன்னால் எனக்கு கிடைத்த
"கணிப்பொறி பொறியாளர்" ( software engineer )
என்ற அடையாளத்தால் 


( 2013 ஜுலை மாத தங்கமீன் வாசகர் வட்டத்தில் பரிசு பெற்றது )

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு