பாரதி
எழுத்துக்கள் உரசியும்
நெருப்பு உருவாகுமென
எழுதி நிரூபித்தவன் நீ
காதலிக்க கன்னியெதற்கு?
கற்பனை போதுமென எனக்கு
கற்பித்தவன் நீ
பேனாவிற்கு மீசை
முளைக்கும்..
கணிப்பொறியில் கனல்
தெறிக்கும்..
கையடக்க தொலைபேசி
கவிஞனாகும் ..
உம் பெயர் எழுதிய
மறுவினாடி
உன்னை மறப்பதற்குப் பதில்
அடங்கித் தொலைக்கட்டும்
என் நாடி
----என பாரதி பிறந்த நாள் இன்று
11-12-2013

Comments