கடைசி ஆசை


கோபத்தின்
உச்சத்தில்
நான்
சாந்தப்படுத்த
நடனமாடுகிறாள்
சிவகாமி

விரக்தியின்
விளிம்பில்
நான் 
தோள்தட்டி
உற்சாகமூட்டுகிறார்
அருள்மொழிவர்மர்

தோல்விகளைச்
சுமந்து
நான் 
கடைசிவரை
போராடச் சொல்கிறான்
வந்தியத் தேவன் 

பாரதியும்
காமராசரும்
என்னைத்
தோள்களில்
சுமக்கிறார்கள்

ஒரே ஆசை..கடைசி ஆசை
என் உடலை எரிக்கையில்
கல்கியின் நூல்களையும்
பாரதியின் கவிதைகளையும்
காமராசரின் வரலாற்று நூலையும்
சேர்த்து எரியுங்கள்

என் சாம்பலாவது
கொஞ்ச நேரம்
இவர்கள் சாம்பலோடு
கலந்துவிட்டு போகட்டும்!

21-07-2013

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு