மஞ்சு விரட்டு




ஏலத்தில் எடுத்ததில்லை!
ஏமா(ற்)றத் தேவையில்லை!
தோற்பதற்கும் வெல்வதற்கும்
'கூட்டி' கொடுக்கும் பழக்கமில்லை!

ஆனாலும் எம்மண்ணில்
விளையாட உரிமையில்லை.
காரணம் ?
கொம்புகளின் நடுவே
கோடிகள் புரளாமல்
வீரமும் மானமும்
விரும்பி புணருவதால்.

தான் ஏமாறுவதை
தானே கொண்டாடும்
கூட்டமது உள்ளவரை
வீர விளையாட்டுக்குத்
தடைகோரும் தவளைகளை
வசை பாடி என்ன பயன் ?

01-05-2013

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு