மழை


கூந்தல் காட்டுக்குள்
கூத்தாடிக் கழிக்க

மூக்கில் ஊர்ந்து
மூர்ச்சை அடைந்திட 

காதின் வளைவுக்குள்
காதல் சொல்லிட

இதழில் அமர்ந்து 
இனிப்பைப் பருகிட 

தோள்களில் தங்கி-தன்
தோற்றத்தைப் பொன்னாக்க

மர்ம தேசங்களில்
மரணித்து பயணித்திட

பாதங்களில் பட்டு-தன்
பாவங்கள் போக்கிட..

மொத்தத்தில் 
அவளோடு நனைந்து 
ஆர்ப்பரிக்கவே வருகிறது 
அந்தி மழை !

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு