Diploma Last Function



பாரதியின் செல்லம்மாவே
              வள்ளுவரின் வாசுகியே 
வைரமுத்துவின் வரிகளே 
              பார்த்திபனின் கிறுக்கலே 

என் அங்கங்கள் அனைத்திலும் பின்னிப் பிணைந்து
              என் உயிரில் சங்கமிக்கும்
                           என்னவளே

என் காதலியே 

உனை வணங்கி பின் மற்றோரை வணங்குகின்றேன் 

கிளிகள் முத்தமிடுதலைக் கூட
       ஓசையினால் உணர்த்திவிடலாம்

கருமேகம் என நினைத்து - தோகை
       விரிக்குமாம் வண்ணமயில்கள் - எம் கல்லூரி
மாணவிகளின் கூந்தல் கண்டு 
அக்கூந்தலைக் கூட அதிலிருந்து வரும்
        இயற்கை மணத்தால் உணர்ந்து விடலாம் 

இவ்வளவு ஏன் 

வார்த்தைகளால் வருணிக்க இயலா - என்
தமிழன்னையைக் கூட
செயல்களினால் விளக்கிவிடலாம் 

ஆனால்,

விளக்க இயலா, வருணிக்க இயலா
          ஒன்று உள்ளது 
அன்புத்தேனில் கலந்து, பாச சிமெண்டில் - நம்
   இதயத்தினுள் கட்டிய
       நட்புக் கோட்டையே அது 

சிற்பிகளாய் நுழைந்தோம் - சிலை வடிக்க
உளிகளாய் மாறினோம் - ஜுனியர் சிற்பிகளுக்காக
இன்று சிலைகளாய் நிற்கின்றோம் -
                                                  வாங்குவோர் யாரோ ?

மலர்தோட்டம் அமைக்க நுழைந்தோம் - முதலாண்டில்
நீராய் பயன்பட்டோம் - ஜுனியர் மொட்டுகளுக்கு
பூவாய் மலர்ந்து நிற்கின்றோம் -
                                                  சூடுவோர் யாரோ ?

கண்டிப்புடன் கொடுத்தாலும் - நம் மீதுள்ள
கவனத்தால் கொடுக்கப்படும் - Assignment
வாங்கும் நாள் ...
                                                  இனி எப்போது?

ஊர்ந்து வரும் நந்தவனம் - நம் IB
அதில் வரும்போது கிடைக்கும் மகிழ்ச்சி ..
                                                   இனி எப்போது?

நம் கல்லூரிச் சோலையில் - புதிதாய்
பூத்த Internet Center - நம் Library
அக்கோயிலுள்ள வேதங்களை நாம்
காலக்கெடுவுடன் எடுக்கும் நாள் ..
                        இனி எப்போது?

Y BLOCK ஆனாலும்
அவைக்கூடமானலும்
Association நிகழ்ச்சிக்கு
அரை மாதம் முன்பிருந்தே நாம்
சிந்தும்  வேர்வை ..
                       இனி எப்போது?

இந்த மன்னர்களின் மாமன்றம் - மாணவ
பேரவைக் கூடம் - அங்கிருந்து நாம்
நாளிதழ் புரட்டும் நாள் ....
                        இனி எப்போது?  

வருங்கால வல்லுனர்களின் TIDAL PARK
நம் COMPUTER CENTER
அங்கு நாம் LOGIN ஆவது ...
                       இனி எப்போது?

விடையில்லா வினாக்கள் ...
விடை சொல்வோர் யாரோ ?

பணம் பத்தும் செய்யும் என்பார்கள் -
அப்பணம் கூட செல்லாதாகிவிடும் ...
நாங்கள் 10 பேர் சேர்ந்தால் !

தடாகத்தில் எம்பாவையர்தம் மேனி பட்டே
வெண்தாமரை சிவப்பாயிற்றாம் 
அந்த தாமரையே வெட்கித் தலை சாயும் 
நாங்கள் குழுவாய் செல்லும் அழகு கண்டு 

கதிரவன் கூட உதிப்பதும், மறைவதும்
நாங்கள் கண்ணசைவில் இடும்
கட்டளையைக் கண்டே 

Assignment கூட சுகமாகும் - நாங்கள
ஒன்றாய் அமர்ந்து எழுதும்போது 

பாரதமும் பாகிஸ்தானும் கூட கைகுலுக்கும்
எங்கள் வட்டமேசை மாநாட்டின்
தீர்மானம் கண்டு .

இவ்வளவு ஏன் ?

நம் கல்லூரி வந்து போகும் வானவில்கள் -
பல சுடிதார்கள் கூட சாயமிழந்து போகும்
நாங்கள் செல்லும் கம்பீரம் கண்டு 

இவர்களை மட்டும் ஏன் தனியே பிரிப்பானேன் 
இவர்களும் நம் கூட்டணிதான் - அரசியல்
கூட்டணி அல்ல அன்புக் கூட்டணி 

SEMINAR எடுப்பது நாமாக இருந்தாலும் - அதற்கு
இவர்கள் விடும் வியர்வைத் துளிகளை
                                நினையாதிருக்க முடியுமா 

பசி என்றவுடன் தன் உணவை நமக்களிக்கும்
அந்த பிஞ்சு விரல்களைத்தான் நாம்
                               நினையாதிருக்க முடியுமா 

நாம் மனம் வருந்தும் நேரத்தில் ஒலிக்கும்
இந்த செவ்விதழ்களின் கீதங்களைத் தான்
               நினையாதிருக்க முடியுமா 

இவர்களை நாம் நினைக்கக் கூடாது 
                                நினைக்கவே கூடாது 

ஆம் !
 மறந்தால்தானே நினைப்பதற்கு 

காதலும் இல்லை - வேறு காரணமும் இல்லை 
இதுவும் ஒருவகை நட்பே 

பறவைகளாய் சுற்றினோம் - இனி
ஒய்வென்று நினைக்க வேண்டாம் 
இரைதான் இதுவரை உண்டோம்.
இனிதான் உலகை பார்க்க வேண்டும் 

நட்சத்திரங்களாய் இருந்த நாம் இனி
நிலவாய் மாறுவோம் 

வண்ணத்துப்பூச்சிகளாய் சுற்றிய நாம் இனி
வசந்தத்தையே சுவாசிப்போம் 

ALGEBRA போட்ட நாம் - இனி
BUDGET போட பழகிக் கொள்வோம் 

நம் அனைவரின் வாழ்க்கையும் இனி
நந்தவனமாகவே இருக்கட்டும் 

இறங்க மனமில்லாமல் தவிக்கின்றேன் 
பிரிய மனமில்லாமல் பிரிகின்றேன் 

மீண்டும் சந்திப்போம் ..
          LATERAL ENTRY ல் PSG TECH ல்
                    இடம் கிடைத்தால் ..!



2001-ல் PSG TECH ல்  நடந்த கடைசி விழாவான TECH DAY ல் படைத்தது.

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு