ஏறக்குறைய


வரிகளைச் சுமக்கும் தோள்கள்
நரை நிறைத்த சிரசு 
தீர்ந்து போன காமம் 
கரைந்து விட்ட கம்பீரம்
விறைந்திருந்த கால்கள் 
வீங்கிப்போன உயிர்விதைகள் 
தூக்க முடியாத கரங்கள் 
தூங்கத் துடிக்கும் கண்கள் 
ஒடுக்கு விழுந்த கன்னங்கள் 
ஒட்டாத உதடுகள் 
ஓட்டத்தை நிறுத்தும் உதிரம் 
ஒப்பாரி விழாத காதுகள் 

ஏறக்குறைய 
எல்லாம் அடங்கி
விட்டது...
ஏரோப்ளேன் 
ஏறிவந்து
எம்புள்ள ஊத்தும்
ஒரு சொட்டு பாலுக்கு
ஏங்கித்தவிக்கும்
தொண்டைக்குழி தவிர 


28/06/14 கவிமாலையில் முதல் பரிசு பெற்றது

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு