ஒரே வானத்தின் கீழ்



எதையும் தூக்கியெறியத்
தெரியாத
குப்பைத் தொட்டி..

சுமைகளைத் தாங்கும்
வாகனத்தின் கழிவைச்
சுமந்துவரும்
கரும்புகை..

நீருற்றி வளர்த்தவன்
சடலத்தோடு உடன்கட்டை
ஏறும் நன்றியுள்ள
விறகுகள்

எப்படியோ
சேர்ந்து வாழ்ந்து
விடுகின்றன
பாசமில்லா
சுமைதாங்கா
நன்றியில்லா
மனிதனோடு
ஒரே வானத்தின் கீழ் !

தாயுமானவன் மதிக்குமார்
(01-06-2014)

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு