வெட்கம்

இருட்டு அறைக்குள்ள
செருக்கா கருத்தரிச்சு,

சுத்தியிருக்கும் நீரை
மொத்தமும் உறிஞ்சி,

உறிஞ்சின நீர
ரத்தமா பாய்ச்சி,

நஞ்சுக் கொடிய 
அஞ்சாம பரப்பி,

சித்தா ஊடுருவி
சத்தெல்லாம் எடுத்து,

முட்டி மோதி
வெளியே வந்து,

வெட்டியா இருந்து,
வேகமா வளர்ந்து,

வெட்கமே இல்லாம
வம்சம் பெருக்குது
வறண்ட கண்மாயில்
சீமைக் கருவை !

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு