இணை கோடுகள்



வெறும் பறவையைப் பார்த்து
விமானம் படைத்தவன்
பெரும் படிப்பெல்லாம் படித்தான்
அதனைத் தகர்க்க 

இயலாதவருக்கு இடமளிக்காத
உடல்களைச் சுமந்து செல்கின்றது
குளிரூட்டப்பட்ட சவப்பெட்டி
சீ... சீ
குளிரூட்டப்பட்ட பேருந்து

தண்டவாளத்தில் போகின்றது
சில நேரங்களில் ரயில்
பல நேரங்களில் உயிர்

மெஞ்ஞானம் பரவியும்
அம்மண இதயத்தோடு
நாமெல்லாம் அலைவது
யார்விட்ட சாபம் ?

மாட்டுவண்டிச் சக்கரங்கள்
போட்டு வைத்த
இணை கோடுகளை
விஞ்ஞானத் தாரூற்றி
அழித்ததினால் வந்த
பாவம் !


2014 ஜுலை மாத கவிமாலையில் பரிசு பெற்றது

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு