சிங்கையைப் பற்றிய சிந்தியல் வெண்பாக்கள்

வருத்தமுடன் நாமிங்கு வண்டியில் ஏற 
அரும்புமிள முத்தங்கள் அல்லல் விரட்டும் 
பெருவிரைவு வண்டியின் பேறு

அங்கம் சிறுத்தும் அழகில் சிறந்தவள்
தங்கமாய் மின்னும் தளிர்மேனி கொண்டநல்
சிங்கையே பாரினில் சிட்டு 

இலைகள் விரும்பியே இம்மண் உதிரும்
கலைகள் அனைத்தும் களிப்பில் பெருகி
நிலைக்குமே சிங்கையில் நீண்டு

ஒளிரும் விளக்குகளில் ஓவியம் மின்னும்
குளிரும் மனசிங்கே குற்றம் தவிர்க்கும்
மிளிருமே சிங்கை விழி

காசிருக்கும் நாடுகளில் கண்டதில்லை இப்பழக்கம் 
நேசித்தே சொல்லுமென் நெஞ்சம்நற் சிங்கை 
பசியாறச் சொல்கின்ற பாங்கு

05-09-14

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு