அதிலேதான் இன்பம்



செவ்வாய்க்கே சென்றாலும்
ஓயாது பறக்கும் 
வருவாயைப் பெருக்க
செவ்வாயையும் பிரிக்கும் 

சொந்தஊரில் இருக்கும்வரை
வெளிநாடே சொர்க்கம் 
சொர்க்கமே வாய்த்தாலும்
சொந்தங்களைத் தேடும்

வாடகை கொடுக்கையிலே
சொந்தவீடே சோலையாகும் 
சொந்தவீடு வாங்கிவிட்டால்
தனியார்வீடு தங்கமாகும் 
தனியார்வீடும் வந்தபின்பு
தரைவீட்டில் தாகங்கொள்ளும்

அதிலேதான் இன்பம்
அதிலேதான் இன்பம் - என
தேடித் தேடி அலைகிறது....

இன்பமென்பது எங்குமில்லை
தன்னிலே இருக்கிறதெனத்
தெரியாத மனசு 

27/09/2014 கவிமாலையில் புத்தகப்பரிசு பெற்றது


Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு