வாக்குறுதி
மேடைகளில்லாமல்
பிரச்சாரமில்லாமல்
தேர்தலில்லாமல்
கட்சியில் சேராமல்
கதாநாயகனாகக் கூட
நடிக்காமல்
யாரிடம் கொடுத்தாயோ
வாக்குறுதியை
தெரியவில்லை.
இறைவா
அவ்வப்போது
மலிவு விலையில்
உருவாக்கி விடுகின்றாய்
மனித உயிர்களை .
மாற்றுத்திறனாளிகளாக.
25-10-2014 கவிமாலையில் புத்தகப் பரிசு பெற்றது
Comments