எனைச் செதுக்கிய உளிகளுக்கு சிந்தியல் வெண்பா மாலை !
---------------------------------------------------------------------------------------------
கண்ணெனப் போற்றுநீ கன்னித் தமிழையே
என்றெனக்கு சொல்லியே என்நெஞ்ச மர்ந்தாயே
பொன்னுசாமி ஐயாநீ பொன்!
* பொன்னுசாமி ஐயா – என் தமிழ் ஆசிரியர்
................................................................................................................
சரிதவறைச் சொன்னதால் சாதனை செய்தேன்
சிரித்தே தொடுவேன் சிகரம் தமிழின்
அரிமாநீ எந்தனின் அச்சு !
................................................................................................................
வாசிக்கச் சொல்லியே வாழ்க்கை கொடுத்துநான்
நேசிக்கும் போது நெருக்கமாய் இல்லாத
ஆசிரியர் வற்றாத ஆறு
..............................................................................................................
Comments