எங்கள் ஊர்ப் பக்கங்களில் கிராம தெய்வங்களுக்கு “புரவி எடுப்பு” என்று அடிக்கடி திருவிழா நடக்கும். அந்தப் புரவி எடுப்புக்கு எட்டு நாட்களுக்கு முன்பு “சேங்காய் வெட்டு” என்று ஒரு நிகழ்வு நடக்கும். அந்த நிகழ்வில் அந்தக் கோவிலுக்கு உரியவர்கள் கோவிலுக்கு அருகில் உள்ள கண்மாய்க் கரையில் மண் வெட்டித் தலையில் சுமந்து கரையின் மேட்டில் கொட்டுவார்கள். அந்த நிகழ்வே புரவி எடுப்புத் திருவிழாவின் தொடக்கம். குதிரைகளைக் கொண்டு சென்று இறை வணக்கம் செலுத்தும் நிகழ்வுக்கும் கரையில் மண் வெட்டுவதற்கும் என்ன தொடர்பு.? ஆற்றங்கரையில் வரலாறு தோன்றியது. அந்த ஆறு குளங்களின் வரலாறு என்ன ? குளங்களுக்கும் மனிதர்களுக்கும் இருந்த உறவு எப்படி இருந்தது என்பதைப் பேசுகிறது “குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு”. அனுபம் மிஸ்ரா 90 களில் எழுதி அதிக விற்பனையான நூலைத் தமிழில் பிரதீப் பாலு மொழிப்பெயர்த்துள்ளார். தென்னிந்தியா நீங்கலான இந்தியாவை மையப்படுத்திக் குளம் கட்டுமானத்தில் ஆரம்பித்து, குளம் கட்டிய இனக்குழுக்கள், குளத்திற்கு வழங்கப்படும் பெயர்கள், அதன் காரணங்கள், குளத்தைப் பராமரித்தல் எனக் கிட்டத்தட்டக் குளங்...
Comments