பிரிவு
சருக்கு மேடைகளின்
சந்தோசச் சத்தங்கள்
சாய்வுநாற்காலியில் வழிந்த
சீனத்துப்பாட்டியின் சிந்தனைகள்
இடைவெளியற்ற விரல்களும்
உரசிக்கொண்டே தோள்களும்
பேசிச்செல்லும் சல்லாபங்கள்
கட்டுப்பாடான உடலுக்கு
கணக்குப் பார்க்கும்
கால் தடங்கள்
தொலைவிலுள்ள உறவுகளை
துரத்தியலையும் தொலைபேசிகள்
மழலைகளோடு மல்லுக்கட்டி
மன்றாடும் சோற்றுப் பருக்கைகள்
பிரிவு நிரந்தரமில்லை எனத்தெரிந்தும்
பித்துப்பிடித்து காத்திருக்கிறன
பூங்காக்கள் நடுராத்திரியில் !
தாயுமானவன் மதிக்குமார்
05/10/14
அக்டோபர் தங்கமீன் வாசகர் வட்டத்தில் பரிசு பெற்றது
Comments