மன்னிப்பு
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள்
ஆதாரத்துடன் இருந்தாலும்
வாதத்திறமையில் வழக்கறிஞர்
வாகை சூடினாலும்
சாட்சி சொல்லச் சம்மதித்து
சாமியே வந்தாலும்
தண்டனைகள் தருவதற்கு
தகுதிகளாயிரம் இருந்தும்
மன்னிப்பை மட்டுமே
தீர்ப்பெழுதும் ஒரே நீதிபதி
அம்மா !
20/02/2015 கவிமாலையில் இரண்டாம்
பரிசு பெற்றது
Comments