விதிவிலக்கு



சிந்திய வண்ணங்களைத்
துடைத்ததில் உருவான
ஓவியப் பலகைகள்

அழகானப் புத்தகங்கள்
அணிவகுத்து நிற்கும்
அண்டாத அலமாரிகள்

வளராது வாடாது
வாழ்நாளைக் கழிக்கும்
வாசமில்லாச் செடிகள்

பேசாத மனிதர்களோடு
பேசும் பொம்மைகள்

புதிய பொருட்கள்
பூத்திருக்கும்
நகரத்து வீடுகளில்

விதிவிலக்காய் இன்னும்
செயற்கை மாவிலையும்
ஒட்டிய கோலமும்.

2014 நவம்பர் மாதக் கவிமாலை

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு