மாற்றம்

மாற்றம்

பெண்களைப் 
பார்க்கிறான்
ரசிக்கிறான் 
அவன்.

ஆணென்றால்
அசிங்கம்
அருவருப்பு
அவனுக்கு.

பெண்களின் 
வெட்கம்
நளினம்
பிடிக்கும் 
அவனுக்கு.

ஆண்களின் 
குரல்
உறுப்புகள்
தொல்லை 
அவனுக்கு.

அறுவை
சிகிச்சையால்
ஆண்மையை
அவிழ்க்கின்றான்,
பெண்மையை
போர்த்துகின்றான்.

பெண்போல
பேசி
பெண்போல
உடுத்தி
அவளாகிவிட்ட 
ஆனந்தத்தில்
அவன்.

பசியில் அழும்
குழந்தை முன் 
துடிக்காத மார்புடனும்
ஆடை களைவதை
அனிச்சையாய் தடுக்காத
கரத்துடனும்
ஆணாகவே இன்னும்
அவன் !


05-11-2014




Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு