பாரதி பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எழுத்துக்கள் ஒவ்வொன்றும்
எழுந்து நடந்தன

பாக்கள் அத்தனையும்
பாயத் தொடங்கின

கவிதைகள் முகத்தில்
மீசை முளைத்தது

சேரியின் வீதிகளில்
செந்தாமரை மலர்ந்தது

அத்தனைக்கும் காரணம்
ஒன்று.

பாரதி பிறந்தராம்
அன்று.

பாரதியை போற்றும்
அத்தனை பேருக்கும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் !


11-12-2014 

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு